சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா, ஸ்ரீகுமார் ஐ.பி.எஸ் ஆகியோர் கைதை கண்டித்து மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!

இதில், மாவட்ட செயலாளர் சேகர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக அரசை கண்டித்தும் கைது நடவடிக்கையை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.


கோவை: தீஸ்தா செதல்வாட், ஶ்ரீ குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக மோடி மீது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கு தொடர்வதற்கு பின்னணியில் செயல்பட்டதாகக் கூறி சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட், மற்றும் ஐபிஎஸ் அதிகாரி ஶ்ரீ குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சேகர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக அரசை கண்டித்தும் கைது நடவடிக்கையை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



இதில், விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...