தமிழக அரசு விளம்பர அரசாகவே தான் உள்ளது-கோவையில் தமிழ்நாடு விவசாய சங்கம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேட்டி..!

தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவித்த சலுகை இன்னும் வந்து சேரவில்லை எனவும், தமிழக அரசு விளம்பர அரசாகவே தான் உள்ளது எனவும், தமிழ்நாடு விவசாய சங்கம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேட்டியளித்துள்ளார்.


கோவை: தமிழக அரசு விளம்பர அரசாகவே தான் உள்ளது என கோவையில் தமிழ்நாடு விவசாய சங்கம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாடு விவசாய சங்கம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த காலத்தில் மின் கட்டண குறைப்பு மற்றும் கடன் நிவாரணம் கோரியும் நடத்தப்பட்ட போராட்டத்தில், உயிரிழந்தவர்களுக்கு ஜூலை 5-ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாண்டு தொண்டாமுத்தூர் பகுதியில்அந்நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது என தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் பல்வேறு விவசாய பொருட்கள் விலை குறைவிற்கு அரசு நிவாரணம் கிடைக்கவில்லையென்றால் போராட்ட அறிவிப்பை அறிவிக்க உள்ளதாகவும் கூறினார். மேலும், மழைக்காலங்களில் தூருவார படாத இடங்களையெல்லாம் தூருவார வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழக அரசு வெறும் விளம்பர அரசாக தான் இருக்கிறது எனவும், விவசாயிகளுக்காக பட்ஜெட் போடுவதாகக் கூறும் போது அதை வரவேற்றதாகவும், ஆனால் இது வரை விவசாயிகளின் நிலத்திற்கு ஒரு ரூபாய் சலுகை கூட வரவில்லை என்பது தான் உண்மை என தெரிவித்தார்.

மேலும், பம்புசெட் உற்பத்தியாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயரத்தினால் அது விவசாயிகள் தலையில்தான் விடியும் என்றும் பம்புசெட் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டுமென கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...