கோவை வாளையாறு அருகே நெடுஞ்சாலையில் கேரளா நோக்கிச் சென்ற “ஸ்பிரிட்” லோடு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து..!

விபத்து தொடர்பாக கே ஜி சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை வாளையாறு அருகே நெடுஞ்சாலையில் கேரளா நோக்கிச் சென்ற “ஸ்பிரிட்” லோடு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து மது உற்பத்தி ஆலைக்கு சுத்த ஆல்கஹால் எனப்படும் “ஸ்பிரிட்” ஏற்றிக்கொண்டு 9-டேங்கர் லாரிகள் கோவை வழியாக கேரளா நோக்கி சென்றுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை 7-லாரிகள் வாளையாறை கடந்து சென்ற நிலையில், பின்னால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (40) என்பவர், 25,000-லிட்டர் ஸ்பிரிட் லோடுடன் ஓட்டி வந்த டேங்கர் லாரி வாளையாறு தனியார் கல்லூரி அருகே வந்தபோது, நெடுஞ்சாலை பராமரிப்பு பணிக்காக வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் மீது முதல் இருக்க வலது புறத்தில் லேசாக வண்டியைத் இருப்பதாக தெரிகிறது.



அப்போது, பின்னால் வந்த மற்றொரு டேங்கர் லாரி பார்த்திபன் ஓட்டி வந்த டேங்கர் லாரி மீது மோதியது, இதில், நிலைதடுமாறிய முன்னால் சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது. இதையடுத்து, டேங்கர் லாரியில் இருந்து ஸ்பிரிட் கசிந்து தீ விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையின் உடன் சென்ற கே ஜி சாவடி போலீசார் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதையடுத்து, பாலக்காடு நெடுஞ்சாலையில் வந்த வாகனங்கள் சர்வீஸ் சாலை வழியாக அனுப்பப்பட்டது.



மேலும், அருகாமையில் யாரும் வராத அளவு பாதுகாப்பு போடப்பட்டு, பொக்லின் வாகனம் மூலம் டேங்கர் லாரி நிறுத்தப்பட்டது. இந்த விபத்தில், ஓட்டுநர் பார்த்திபன் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2-லாரிகளில் தற்போது பழுது பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், விபத்து தொடர்பாக கே ஜி சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...