கோவையில் 11 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; தாயின் ஆண் நண்பர் போக்சோவில் கைது….!

மாணவி பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர், குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் முடிவில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.


கோவை: கோவையில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு, பாலியல் தொல்லை அளித்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த 38 வயது பெண் ஒருவருக்கு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அந்த பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெயிண்டர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதுள்ளது.

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன்-மனைவியாக, குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். அந்த பெண்ணின் மகள் தற்போது பிளஸ்-1 படித்து வருகிறார். ஒரே வீட்டில் அனைவரும் வசித்து வந்த நிலையில், அந்த பெண்ணின் தாயுடன் பழகி வந்த நபர், மாணவியிடம் ஆபாச வீடியோக்களை காண்பித்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது.

இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறியும், அவர் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த மாணவி, நாளுக்கு நாள் அந்த நபரின் அத்துமீறல்கள் அதிகரித்து வந்ததால், இது குறித்து அவரது பள்ளி தலைமை ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவி சொல்வதை கேட்டு அதிர்ச்சியடைந்த, தலைமை ஆசிரியர், உடனடியாக சம்பவம் குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், அவர்கள் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வழக்குப்பதிவு செய்து பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...