வால்பாறையில் விபத்தில் சிக்கி கேரளாவை சேர்ந்தவர் பலி; 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்..!

வால்பாறை வழியாக சாலக்குடி சென்று கொண்டிருந்த போது, பழைய வால்பாறை என்ற இடத்திற்கு அவர்களது கார் வந்த போது, அதிக மழை பெய்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் விழுந்தது.


கோவை: கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். மெத்தை வியாபாரம் செய்து வரும் இவர், இன்று பொள்ளாச்சிக்கு அலுவலக வேலையாக வந்துள்ளார். அவருடன், அவரது நண்பர்கள் சந்தோஷ் மற்றும் மனோஜ் என மூவர் காரில் வந்துள்ளனர்.

பொள்ளாச்சியில் அலுவலக வேலையை முடித்து விட்டு, பின்பு எர்ணாகுளம் பகுதிக்கு செல்வதற்காக வால்பாறை வழியாக சாலக்குடி சென்று கொண்டிருந்தனர்.



அப்போது, பழைய வால்பாறை என்ற இடத்திற்கு அவர்களது கார் வந்த போது, அதிக மழை பெய்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 20 அடி பள்ளத்தில் விழுந்தது.



விபத்தில், பயணித்த மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், மூவரையும் அங்குள்ளவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சந்தோஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து வால்பாறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...