கோவை அரசு மருத்துவமனை சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது..!

கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக மக்களுக்கு மருத்துவ பணியாற்றிய மருத்துவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார்.


கோவை: கோவை அரசு மருத்துவமனை சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையை அங்கீகரிக்க உருவாக்கப்பட்டதுதான் மருத்துவர் தினம் ‘உலக மருத்துவ தினம்’ என்று இருந்தாலும், இந்தியாவில் ஆண்டுதோறும் ஜூலை 1 ந் தேதி 'தேசிய மருத்துவர் தினமாக' நாம் கடைப்பிடித்து வருகிறோம்.

இது 1991-ம் ஆண்டு முதல் நம் நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது இது பிதான் சந்திர ராய் நினைவாக கொண்டாடப்படுகிறது. இவர் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள பாங்கிப்பூரில் 1882-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி பிறந்தார்.

பி சி ராய் என்று அழைக்கப்பட்டார். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படித்தவர். அதுவும், ஒரே சமயத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்திற்கான எம்.ஆர்.சி.பி. மற்றும் எம்.ஆர்.சி.எஸ். ஆகிய படிப்புகளையும், இரண்டு ஆண்டுகள் மூன்று மாதங்களில் படித்து சாதனை படைத்தவர் ஆவார்.

இவர் சிறந்த மருத்துவராகவும், விடுதலை போராளியாகவும் இருந்தவர். இவர் இறப்பதற்கு ஒரு வருடம் முன்பு இவரது சாதனைகளை கருத்தில் கொண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அளிக்கப்பட்டது. அப்படிப்பட்ட பிதான் சந்திர ராயை நினைவு கூறும் வகையில் தான் அவரது பிறந்த நாளான ஜூலை 1-ந் தேதியை தேசிய மருத்துவர் தினமாக இந்தியா அறிவித்துள்ளது. 80-ஆண்டு காலம் இந்த மண்ணுலகில் வாழ்ந்த பிதான் சந்திர ராய் தன்னுடைய பிறந்த தினத்திலேயே மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் சமீரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக மக்களுக்கு மருத்துவ பணியாற்றிய மருத்துவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை டீன் மருத்துவர் நிர்மலா தலைமை வகித்தார்.



நிகழ்ச்சியில் கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...