ஜிகேஎம் குளோபல் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட், அமெரிக்க வருமான வரி சம்பந்தமான சிறப்பு பயிற்சியளிக்க ஹேப்பி வேலி பிஸினஸ் ஸ்கூல் உடன் ஒப்பந்தக் கையெழுத்திட்டது.
கோவை: இந்தியாவிலிருந்து சேவை அளிக்க உதவும் என எதிர்பார்க்கலாம். அமெரிக்கா மற்றும் இந்திய வரி ஆலோசனை சேவைகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஜிகேஎம் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் வருமான வரிக்கணக்கு தயாரிப்பு மற்றும் வரி சேவைக்கான பயிற்சியை, கற்க விரும்பும் மாணவர்களுக்கு அளித்து, சான்றிதழ் வழங்க ஜிகேஎம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஜிகேஎம் நிறுவனர் ஜி. கார்த்திகேயன் மற்றும் ஹேப்பி வேலி பி.ஸ்கூல் தலைவர் டாக்டர் கனகராஜ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த சான்றிதழ் படிப்பானது, அமெரிக்காவில் வரி செலுத்தும் தனி நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வரி சம்பந்தமான சேவைகளுக்கான வேலை வாய்ப்பை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் பெற உதவிகரமாக இருக்கும்.
இந்த இணைப்பின் சிந்தனைகளை பகிர்ந்து கொண்ட ஜி.கார்த்திகேயன் கூறுகையில், "இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு நிதி, வரி சம்பந்தமான சேவை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதற்கான வேலை வாய்ப்புக்களும் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் அதிக அளவில் அதிகரித்து வருகிறது.
அதற்கு தேவையான பயிற்சியையும், ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் சான்றிதழ் பட்ட திட்டம் துவங்கியுள்ளோம். மூன்று மாத காலம் நடத்தப்படும் இந்த பயிற்சியில் தேர்வு பெறுபவர்கள் ஜிகேஎம் நிறுவனத்திலும் இந்தியாவின் மற்ற முன்னணி நிறுவனங்களிலும் உடனடி வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
இந்த ஒப்பந்தம் சிறப்பு வணிக கல்வி நிறுவனமான ஹேப்பி வேலி பி.ஸ்கூல், உடன் ஏற்படுத்தப்பட்டது இளைஞர்களின் திறனை மேம்படுத்தி அவர்களின் சிறந்த எதிர்கால கனவுகளை அடைய உதவும்.
ஹேப்பி வேலி வணிக கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் கனகராஜ் கூறுகையில், "ஜிகேஎம் நிறுவனத்துடன் எங்கள் கல்வி நிறுவனம் ஒரு நல்ல கல்வி உறவை கொண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த நிறுவனம் பயிற்சி அளித்து, ஜிகேஎம் நிறுவனத்தில் மட்டுமின்றி பல்வேறு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தந்துள்ளது.
அமெரிக்க வரி முறை கணக்கீட்டில் மேலும், பல பணியாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு, மேலும், பல மாணவர்களுக்கு ஜிகேஎம் நிறுவனத்துடன் இணைந்து இந்த துறையில் பயிற்சி அளிக்க, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம்," என்றார்.