கோவையில் தடாகம் பள்ளத்தாக்கு கனிமவளக் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!

தடாகம் பள்ளத்தாக்கு கனிமவளக் கொள்ளையை கண்டித்தும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் தடாகம் பள்ளத்தாக்கு கனிமவளக் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் அளவிற்கு அதிகமாக கனிம வளங்களை கொள்ளை அடிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றம் அப்பகுதியில் இயங்கி வந்த சுமார் 300க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளுக்கு தடை விதித்து சீல் வைத்துள்ளது.

இருப்பினும், அவ்வப்போது அங்கிருந்து மண் மற்றும் செங்கற்கள் திருடப்பட்டு வேறு இடத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தடாகம் காவல் நிலையத்திலும், அவ்வப்போது வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த கனிம வள கொள்ளையை கண்டித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.



கோவை வடக்கு மாவட்ட செயலாளர் பெரியதனம் ராமச்சந்திரன் தலைமையில், நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன மற்றும் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் "தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் சட்ட விதிமுறைகளை மீறி அரசு அனுமதியின்றி செயல்படும் செங்கல் தொழிற்சாலைகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் தொழிற்சாலைகளின் மின் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும், கனிம வள கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீதும் அதற்குத் துணை புரிந்த கனிம வளத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்பகுதியில், பெய்யும் மழை நீரை சங்கனூர் கௌசிகா நதியில் வரும்படி வழிவகை செய்ய வேண்டும், சின்ன தடாகம் நஞ்சுண்டாபுரம் வீரபாண்டி கிராமங்களில் செங்கல் சூளை தொழிற்சாலைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை மீட்டு நிலம் இல்லாத விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...