பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தாத பாதாள சாக்கடை திட்டப் பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என நகராட்சி தலைவி சியாமளா நவநீதகிருஷ்ணன் உறுதியளித்துள்ளார்.
கோவை: பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது நகராட்சி தலைவி சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொள்ளாச்சி நகரப் பகுதியில் தெருவிளக்குகள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை தேவைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும், மக்கள் நலத் திட்டங்களுக்கு 30-தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நகராட்சியில், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்தாததால் தார் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக பணிகளை விரைந்து முடிக்க கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து, நகராட்சி தலைவி சியாமளா நவநீதகிருஷ்ணன் அளித்த பேட்டியின் போது, கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு முழுமையாக நிறைவேற்றப்படாததால் பெரும்பாலான வார்டுகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதாகவும், அதேபோல் ஆளிறங்கு குழிகளுக்கு போடப்பட்ட ஸ்லாப்புகள் சேதமடைந்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய நகராட்சி தலைவி தற்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் சாலைகள் மற்றும் திட்ட பணிகளை முடிக்க அரசு நிதி ஒதுக்கி வருவதால் பணிகள் நடைபெற்று வருகிறது.
பணிகள் நிறைவு பெற்று வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டவுடன் விரைவில், இத்திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்தார்.