ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் உயர் கல்வி படிப்பதில் உள்ள சிக்கல்களைப் போக்க வேண்டும்- கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்..!

இதில், உடனடியாக தலையிட்டு ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும். அவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை தேவையான இடங்களில் உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.


கோவை: ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர் கல்வி படிப்பதில் உள்ள சிக்கல்களைப் போக்க வேண்டும் என தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர் கல்வி படிப்பதில் உள்ள சிக்கல்களை போக்க வேண்டும் என தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக் கூடிய, ஒரு நரம்பு சார்ந்த வளர்ச்சி குறைபாடு. இதனால், குழந்தைகள் பல விதங்களில் பாதிக்கப்படுகிறார்கள். தங்களுக்கான வேலைகளை செய்வதற்கு அவர்களுக்கு பிறரின் உதவி தேவைப்படும். ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதாலும், தொழில்நுட்பம் கை கொடுப்பதாலும் இப்போது, அவர்களுக்கான பள்ளிகள், காப்பகங்கள் வந்துள்ளன.

முறையான பயிற்சிகள் மூலம் ஆட்டிசத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, சமூகத்தில் சமநிலைக்கு கொண்டு வர முடியும். அதில், பல பெற்றோர்கள் போராடி வெற்றிபெற்றுள்ளனர். கோவை காளப்பட்டியைச் சேர்ந்த ஹரிஹரன் - சாந்தி தம்பதியினரின் மூத்த மகன் பாலாஜி. இவர் ஆட்டிசம் பாதிக்கப்பட்டு, பேசும் திறனின்றி இருக்கிறார். ஆனாலும், அவர் தனது வேலைகளை தானே செய்யும் அளவுக்குத் திறன் பெற்றுள்ளார். படிப்பிலும் சிறந்து விளங்குகிறார்.

அவினாசி சாலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் பத்தாம் வகுப்பு வரை படிக்க, பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன. ஆனால், உயர் கல்வி படிக்க அவர்களுக்கு எந்த வசதியும் இல்லை என்று பாலாஜியின் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

பேசவே முடியாத பாலாஜியால், ஹால் டிக்கெட் விதிகளின்படி, பதில் சொல்லி, ஸ்கிரைப் தேர்வு எழுத முடியாது என, அவரது பெற்றோர் கூறியுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் ஸ்கிரைப் தேர்வு எழுத, உதவியாளரை அழைத்துச் செல்லலாம் என, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அனுமதி அளித்துள்ளது.

ஆனால், ஸ்கிரைப் தேர்வு எழுத, உதவியாளரை அழைத்துச் செல்ல அனுமதிப்பதில்லை என, பெற்றோர்கள் கூறுகின்றனர்.எனவே, ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஸ்கிரைப் தேர்வு எழுத, அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும்.

அவர்களால் என்ன முடியுமோ, அதனைக் கொண்டே அவர்களிடம் தேர்வு நடத்தி, அவர்களின் திறனை மதிப்பிட வேண்டும். அதுபோல, ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி பெற, கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும்.

படிக்க விரும்பும், படிக்கும் தகுதி கொண்ட எந்தவொரு மாணவருக்கும், எந்தக் காரணத்தைக் கொண்டும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக் கூடாது. இதில், பெற்றோர்களின் வலியை அரசு உணர வேண்டும்.

எனவே, தமிழக உயர் கல்வித் துறையும், தமிழக முதல்வரும் இதில் உடனடியாக தலையிட்டு ஆட்டிசம் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி படிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும். அவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை தேவையான இடங்களில் உடனடியாக தொடங்க வேண்டும்.

இவ்வாறு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...