கோவையில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா 'கண்ட்ரோல் ரூம்' 24×7 அழைக்கலாம்..!

கொரோனா கட்டுப்பாட்டு அறையை 0422-2300132, 0422-2302323 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கொரோனா நோய் குறித்த சந்தேகங்களையும், உடல் ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களின் விபரங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு வகையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மீண்டும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது. இதை ஒரு சிலர் மட்டும் கடைபிடித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் கட்டாய முகக்கவச உத்தரவைக் கண்டுகொள்ளாமல் இருப்பது கொரோனா நோயின் மூன்றாவது அலை வருவதற்கு வழி வகை செய்வது போல உள்ளது.

இதனால், கோவை மாநகராட்சி நிர்வாகம் நோய் தடுப்பு வழிமுறைகளை பொது மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிறுத்தம், திரையரங்கம், மற்றும் வணிக வளாகங்கள், போன்ற இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம்அபராதம் வசூலிக்கப்படுகிறது.

கொரோனா நோய் முதல் மற்றும் இரண்டாவது அலையின்தாக்கம் வந்த போது மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில் 24-மணி நேரமும் கொரோனா [கண்ட்ரோல் ரூம்] கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்று இதன் பொறுப்பாளர் முகுந்தன் கூறினார். மேலும், கொரோனா கட்டுப்பாட்டு அறையை 0422 2300132, 0422-2302323 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு கொரோனா நோய் குறித்த சந்தேகங்களையும், உடல் ஆரோக்கியம் மற்றும் தடுப்பூசி செலுத்தும் இடங்களின் விபரங்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

அவர்களின் குறைகளை கண்டறிந்து உடனடியாக தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். எனவே கொரோனா நோய் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கண்ட்ரோல் ரூம் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...