கோவை பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை, ஆழியாறு கவி அருவி மற்றும் கோபால்சாமி மலை அருவியில் வெள்ளப்பெருக்கு..!

மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கவியருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கவி அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கனமழை, ஆழியாறு கவி அருவி மற்றும் கோபால்சாமி மலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவியருவி கோவை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று. இங்கு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவியருவி கொரோனா மற்றும் வறட்சி காரணமாக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டு, இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், கவியருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால், கவி அருவியில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. வறட்சி காரணமாக தண்ணீர் இன்றி காணப்பட்ட அருவியில், தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால், காற்று வெள்ளம் குறைந்தவுடன் அருவி மீண்டும் திறக்கப்படும் என சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.



இதனிடையே, நேற்று மதியம் முதல் கனமழை பெய்ததால் பொள்ளாச்சியை அடுத்துள்ள அங்கலகுறிச்சி கோபால்சாமி மலை நீர் பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால், கோபால்சாமி மலை தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி மலை முகடுகளில் இருந்து அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கோபால்சாமி மலையில் இருந்து அருகில் தண்ணீர் கொட்டும் காட்சியை அந்த வழியாக ஆழியாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதுடன், வீடியோ பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...