கோவையில் 12 ஆம் வகுப்பு முடித்த காவலர்களின் குழந்தைகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

"தழைக்கட்டும் நமது தலைமுறை-2022" என்ற தலைப்பிலான வழிகாட்டி நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவங்கி வைத்தார். மேற்கு மண்டலத்தை சேர்ந்த காவலர்கள் மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் அவர்களது மகன்/மகள் ஆகியோர் பங்கேற்றனர்.


கோவை: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின் பேரில், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், தமிழ்நாடு காவல்துறை குடும்பத்தில் 12 ஆம் மாணவ, மாணவிகளுக்கான "தழைக்கட்டும் நமது தலைமுறை-2022" என்ற தலைப்பிலான வழிகாட்டி நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று துவங்கி வைத்தார்.



கோவை மாநகர பீளமேடு பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், சைலேந்திரபாபு காணொளி காட்சி மூலம் மாணவ - மாணவிகள் மத்தியில் பேசினார்.



இந்நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரி முனைவர்கள், பேச்சாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில், மேற்கு மண்டலத்தை சேர்ந்த காவல் துறையினர் குடும்பத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் - 256 பேர், மற்றும் அவர்களது பெற்றோர்கள் - 357 பேர், என மொத்தம் 613 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவ - மாணவிகள் அவர்களது சந்தேகங்களை சிறப்பு விருந்தினர்களிடம் கேட்டு பயன் அடைந்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...