கோவை பொள்ளாச்சியில் தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த கோரி ஜூலை 13-ம் தேதி ஆர்ப்பாட்டம் - தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் அறிவிப்பு..!

கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.150-வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். ரேஷன் கடையில் மானியத்துடன் வழங்கும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.


கோவை: தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த கோரி ஜூலை 13-ம் தேதி தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தென்னை விவசாயத்தை முதன்மையாக விவசாயிகள் செய்து வருகின்றனர். கடந்த பல மாதங்களாக தேங்காய் விலையில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.



இந்நிலையில், தமிழ்நாடு தென்னை உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், நெல்லை அரசு கொள்முதல் செய்வது போல தென்னை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதார விலைக்குத் தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும்.



கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.150-வழங்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். ரேஷன் கடையில் மானியத்துடன் வழங்கும் பாமாயிலுக்கு பதிலாகத் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தென்னை விவசாயிகளின் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 13-ஆம் தேதி பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர், கோரிக்கைகள் தொடர்பாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவை சந்தித்த விவசாயிகள் மனு அளித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...