பொள்ளாச்சியை அடுத்த நெகமம் வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனம் பறிமுதல்!

பொள்ளாச்சியை அடுத்துள்ள நெகமம் பகுதி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.


கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள நெகமம் பகுதி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சியை அடுத்த நெகமத்திலிருந்து வடசித்தூர் ரோடு பகுதியில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் ரோந்து சென்றனர்.

இதில், கப்பலாங்கரை காலனி அருகே, சந்தேகப்படும்படியாக சரக்கு ஆட்டோ ஒன்று நின்றது.



அதனை சோதனை செய்தபோது தலா 50 கிலோ எடையில் 22 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்துள்ளது. விசாரணையில், கேரளாவுக்கு சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்த முயன்றது பாலக்காடு மாவட்டம் சித்தூரை சேர்ந்த விஷ்ணு என்பவர் என தெரியவந்தது. சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த புட்செல் போலீசார், தலைமறைவான விஷ்ணுவை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...