கோவை மக்கள் வரிப் பணத்தில் மேயருக்கு ஒரு கோடியில் வீடா..? -அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு….!

கோவை மக்களின் வரிப்பணத்தை முறையாக பயன்படுத்துவதில்லை மற்றும் மாநகராட்சியில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி அதிமுக மாமன்ற உரிவினர்கள் வெளிநடப்பு செய்தனர்.



கோவை: கோவை மக்களின் வரிப்பணத்தை மேயரின் வீட்டை அழகுப்படுத்த பயன்படுத்தப்படுவதாகவும், தொடர்ந்து மாநகராட்சியில் பல்வேறு வகையில் ஊழல் நடைபெற்று வருவதாக, அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் குற்றம் சாட்டிய நிலையில், கூட்டத் தொடரை புறக்கணித்து அதிமுக கவுன்சிலர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரண கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவித்த நிலையில், அதில் கலந்து கொள்ள வந்த அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன் மற்றும் கவுன்சிலர்கள் ஷர்மிளா சந்திரசேகர், ரமேஷ் ஆகியோர் மாநகராட்சி மாமன்றத்தின் முன்பாக மேயரின் வீட்டை அழகுபடுத்த ஒரு கோடி ரூபாய் நிதியா..? ஊழல் நடக்குதுங்கோ, ஊழல் நடக்குதுங்கோ, என்ற பதாகைகளை கையில் ஏந்தி மாமன்றத்தின் முன்பாக தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக மாமன்ற குழு தலைவர் பிரபாகரன்,

கோவை மாநகராட்சி மக்களை விரட்டி விரட்டி வாங்கிய வரிகளை மக்களுக்கான நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தாமல், கோவை மாநகராட்சி திமுக மேயர் தங்குவதற்கான வீட்டை அழகு படுத்துவதற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததாகவும், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக பராமரிப்பிற்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது, கோவை மாநகராட்சி பிரதான அலுவலகம் கட்ட பராமரிப்புக்கு ஒரு கோடி என்றும் கோடிகளில் நிதி ஒதுக்கி முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

இவற்றிற்கெல்லாம் முறையாக டெண்டர் விடப்பட்டுள்ளதா.? என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கேள்வி எழுப்பிய அவர், திடீரென கோவை மத்திய மண்டலத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான 6 கோடி ரூபாய் வீட்டு வரியை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், வரியை ரத்து செய்த வீடுகள் யாருடையது..? என்பது இதுவரை தெரியவில்லை என்றும் இதனால் கோவை மாநகராட்சிக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பிரபாகரன் குற்றம்சாட்டினர்.



Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...