ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை - கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை..!

இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமலும் சென்றால், சிசிடிவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.


கோவை: கோவை மாநகரில் விபத்துக்களை குறைக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாநகரில்இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாமலும், கார்களில் செல்வோர் சீட் பெல்ட் அணியாமலும் சென்றால் சிசிடிவிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.



கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன் ஏற்கனவே இதனை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் வாகன ஓட்டிகள் வழக்கமாக செல்ல கூடிய பெட்ரோல் பங்க் களில் இந்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

அந்த அறிவிப்பு பலகையில், வாடிக்கையாளர்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறீர்கள் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...