கோவை 63-வது வார்டு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆங்கில ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்- தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்..!

கோவை மாநகராட்சி 63-வது வார்டில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆங்கில ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோவை ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆங்கில ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆங்கில ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, 63-வது வார்டில்ராமகிருஷ்ணபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 11 மற்றும் 12-ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் நீண்ட விடுப்பு எடுத்துள்ளார்.

தற்போது இந்தப் பள்ளியில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆங்கில பாடம் எடுத்து வரும் ஆசிரியர் லீலா மகேஸ்வரி என்பவர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். தற்போது 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், ஆங்கில ஆசிரியர் இடம் காலியாக இருப்பதால், மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள்.

இதனை, அப்பகுதி பொதுமக்களும், மாணவிகளும் எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். ஆங்கில மொழிப்பாடம் என்பது மிக மிக முக்கியமானது. தமிழ் வழியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆங்கில மொழிப்பாடத்தை பயிற்றுவிக்க, திறமையான ஆங்கில ஆசிரியர்கள் தேவை.

மற்ற பாடங்களின் ஆசிரியர்கள், ஆங்கில மொழிப்பாடத்தை எடுத்துவிட முடியாது. எனவே, 11-ம் வகுப்பு தொடங்குவதற்கு முன்பே, ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆங்கில ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, அவர்களின் உயர் கல்விக்கும், எதிர்காலத்திற்கும் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் கற்பது அவசியம். எனவே, கோவை மாநகராட்சியும், தமிழக அரசும் இதில் தலையிட்டு, உடனடியாக ஆங்கில ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில் செய்யப்படும் ஒருநாள் தாமதம் கூட, மாணவிகளின் எதிர்காலத்தை பாதிக்கும். எனவே, தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...