பூங்கா மேம்பாடு: வார்டு 22 யில் திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில இணைச் செயலாளர் ஆய்வு..!

கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட அரசுப் பணியாளர் நகர், பூங்கா நகர், சிவராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பூங்கா மேம்பாடு மற்றும் மரங்கள் சீரமைப்பு குறித்து திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில இணைச் செயலாளர், மணிசுந்தர் உள்ளிட்டோர் இன்றுஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட அரசுப் பணியாளர் நகர், பூங்கா நகர், சிவராம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பூங்கா மேம்பாடு மற்றும் மரங்கள் சீரமைப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

22வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் கல்வி, பூங்காக்கள் குழு உறுப்பினராக உள்ள கோவை பாபு, வேண்டுகோளுக்கிணங்க, திமுக சுற்றுச்சூழல் அணியின் மாநில இணைச்செயலாளர் மணிசுந்தர் மற்றும் அருளகம் கானுயிர் அறக்கட்டளையின் நிறுவனர், சூழல் ஆர்வலர் ஆய்வாளர் சு. பாரதிதாசன் உள்ளிட்டோர் இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்தனர்.



கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பல நூறு குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இதனால், ரிசர்வ் சைட்டில் அமைக்கப்பட்டுள்ள மாநகராட்சி பூங்காக்களை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. குறிப்பாக, இயற்கை சூழலை மேம்படுத்த மரங்கள் நடுவது, நடைப்பாதை அமைப்பது, குழந்தைகள் விளையாட இடம் போன்ற மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது, அரசுப்பணியாளர் நகர் நலச் சங்கத்தினர், சிவராம் நகர் நலச் சங்கத்தினர் மற்றும் திமுக கட்சியினர் உடன் இருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...