கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு - ஜெயலலிதா கார் ஓட்டுநர் கண்ணனிடம் நடந்த 2 ஆம் நாள் விசாரணை நிறைவு…!

இன்று காலை 10 மணியளவில் துவங்கிய விசாரணை, சுமார் 9 மணி நேரத்துக்கு பிறகு நிறைவடைந்து. மீண்டும் கண்ணனை விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


கோவை: கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கண்ணனிடம் தனிப்படை போலீசார் இரண்டாவது நாளாக இன்று விசாரணை மேற்கொண்டனர்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த விசாரணையில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா அவரது உறவினர்கள் விவேக் ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, அவரது கார் ஓட்டுநர். மற்றும் சஜீவன் மற்றும் கோடநாடு பங்களாவில் பணியாற்றிய ஊழியர்கள், மேலாளர் நடராஜன் உள்ளிட்ட 250 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் மூன்று முறை விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நீண்டகால கார் ஓட்டுநராக இருந்த கண்ணனிடம் தனிப்படை போலீசார் கடந்த 2 தினங்களாக கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இரண்டாம் நாள் விசாரணை இன்று காலை 10 மணியளவில் துவங்கியது. சுமார் 9 மணி நேரம் விசாரணைக்குப் பிறகு 7.30 மணியளவில் விசாரணை நிறைவடைந்து, கண்ணன் அங்கிருந்து புறப்பட்டார். மீண்டும் அவரை விசாரணைக்கு அழைக்க வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

வரும் நாட்களில், கோடநாடு வழக்கில் தொடர்புடைய மேலும் பல்வேறு நபர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...