கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று; தீவிர கண்காணிப்பில் 9 'மைக்ரோ கட்டுப்பாடு' பகுதிகள்..!

கோவையில் குரும்பபாளையம், ஆர்.எஸ். புரம், வடவள்ளி, தொண்டாமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், உள்ளிட்ட 9 இடங்களில் 'மைக்ரோ கண்டைமென்ட்' பகுதிகளாக கண்காணிப்பு வளையத்திற்குள் சேர்க்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் மீண்டும் தலை தூக்கி வரும் கொரோனா பரவல் காரணமாக, மீண்டும் புதிய நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட நிலரப்படி அமல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கோவையில் நாள்தோறும் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால், அதிக பரவல் இருக்கும் பகுதிகள் "மைக்ரோ கட்டுப்பாட்டு" பகுதிகளாக பிரித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக தினசரி கொரோனா நோய் தொற்று பாதிப்பு 100 ஐ நெருங்கி வருவதால், நோய் பரவலை உடனடியாக கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் பரிசோதனை அதிகரித்தல், அனைத்து வார்டு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்தல், பொது மக்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தல் என பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் குரும்பபாளையம் பகுதியில் உள்ள ஒரே தெருவில் 4 பேருக்கு, ஆர்.எஸ். புரம் பகுதியில் ஒரே வீட்டில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வடவள்ளி, தொண்டாமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், உள்ளிட்ட 9 இடங்களில் 'மைக்ரோ கண்டைமென்ட்' பகுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் தூய்மை பணியாளர்களை கொண்டு கிருமி நாசினி தெளிப்பது, பாதிக்கப்பட்டோரை கண்காணிப்பது போன்ற பணிகளை சுகாதாரத் துறையினர் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குனர் அருணா கூறுகையில், கோவை மாவட்டத்தில் தற்போது 9 இடங்கள் 'மைக்ரோ கண்டைன்மென்ட்' பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒரு வீட்டில் 3 பேருக்கு மேல் நோய் பாதிப்பு இருந்தால் அந்த வீட்டை மட்டும் 'மைக்ரோ' கட்டுப்பாட்டு" பகுதி என அறிவிக்கப்படும்.

ஒரு வீதியில் பாதிக்கு மேல் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், வீதி முழுவதும் கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றப்படும் என்றும் இந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

மேலும், தொற்று உறுதியானால் உரிய சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா பரவல் கணிசமாக உயர்ந்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்தும், வெளியே பொது இடங்களில் தனி நபர் இடைவெளி கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தி கொள்ள வேண்டும்", என்று அறிவுறுத்தினார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...