கோவை சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்த வழக்கு - அரசு பேருந்து ஓட்டுநருக்கு 2.6 ஆண்டு சிறை…!

2015 ஆம் ஆண்டு ஏற்படுத்திய விபத்தின் விசாரணை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி சரவணபாபு, விபத்தை ஏற்படுத்திய கூடலூரைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.6,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


கோவை: கோவையில் 2015 ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் நிறை மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவத்தில், விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2015 ஆண்டு செப்டம்பர் மாதம், நீலம்பூர் பகுதியைச் சேர்ந்த முருகேஷ் என்பவர், ஒன்பது மாத கர்ப்பிணியான தனது மனைவி சரஸ்வதியை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள காவல் சோதனை சாவடி அருகே இருசக்கர வாகனம் வந்த போது, கோவையிலிருந்து சோமனூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து அவர்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது.

விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த நிறை மாத கர்ப்பிணி மற்றும் அவரது கணவர் படுகாயமடைந்தனர். இருவரும், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சரஸ்வதியின் நிலைமை மோசமடைந்ததால், மருத்துவர்கள் அவரது வயிற்றில் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் காப்பாற்றினார்.

விபத்து தொடர்பாக, மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ரமேஷ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கை இறுதிகட்டமாக விசாரித்த நீதிபதி சரவணபாபு, விபத்தை ஏற்படுத்திய நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுனர் ரமேஷுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 6,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

சாலை விபத்தில் நிறைமாத கர்ப்பிணி குழந்தையை பெற்றுவிட்டு, உயிரிழந்த சம்பவத்தில் ஏழு ஆண்டுகளுக்கு பிறகு விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...