போக்ஸோ சட்டம்: விழிப்புணர்வு மற்றும் கையாலும் நுணுக்கங்கள் குறித்து காவல் துறையினருக்கு விரிவுரை விளக்க கூட்டம்

போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவிடும் வழக்குகளின் புலன் விசாரணையின் போது, போலீசார் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய சட்ட நுணுக்கங்கள் குறித்து பேராசிரியர் சிவக்குமார் விரிவாக எடுத்துரைத்தார்.


கோவை: காவல் துறையினருக்கு, போக்ஸோ சட்டம் குறித்த சிறப்பு விரிவுரை வழங்க வேண்டும், என கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் (POCSO Act) குறித்து கோவை மாநகரில் பணிபுரியும் பெண் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆகியோர் பங்கேற்ற விரிவாக்க கூட்டம் நடைபெற்றது.

போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவிடும் வழக்குகளின் புலன் விசாரணையின் போது, பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் போது கவனிக்க வேண்டிய சட்ட நுணுக்கங்கள் குறித்து பேராசிரியர் சிவக்குமார் விரிவாக எடுத்துரைத்தார்.



மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு சம்பந்தமான வழக்குகளில், சட்டப்பிரிவுகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் போக்ஸோ சட்டத்தின் நுணுக்கங்கள், அச்சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்து விளக்கமளித்தார்.

இந்த சிறப்பு விரிவுரையானது, பங்கேற்ற பெண் காவலர்கள் உட்பட அனைத்து காவலர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருந்தது என்றும்

போக்ஸோ வழக்கு குறித்த தங்களுக்கு இருந்த பல்வேறு சந்தேகங்களுக்கு தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் அமைந்தது என்று நிகழ்ச்சியில் பங்கேற்ற போலீசார் தெரிவித்தனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...