கோவை மாவட்ட காவல் துறையின் 'ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்' திட்டம் துவக்கம்

இவ்விழிப்புணர்வு கூட்டத்தின் துவக்க விழாவில், கோவையை சேர்ந்த 94 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளுக்கும் பாலியல் சம்மந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்த, மாவட்ட காவல் துறை சார்பில் "ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்" என்ற விழிப்புணர்வு திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளிட்ட எந்த ஒரு குற்றங்களும் நடைபெறாமல் தடுப்பது மற்றும் அவர்களை அக்குற்றங்களிலிருந்து பாதுகாப்பது என்பதே "ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம்" திட்டத்தின் நோக்கமாகும்.



இவ்விழிப்புணர்வு கூட்டத்தின் துவக்க நிகழ்ச்சி இன்று கோவையில் உள்ள கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் 94 பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.



குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தெரிவிக்க *1098* என்ற எண்ணிலும், கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் *94981-81212* மற்றும் வாட்ஸ்அப் எண் *77081-00100* என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில், மேற்கு மண்டல ஐ.ஜி தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். கோவை சரக காவல்துறை டி.ஐ.ஜி எம்.எஸ். முத்துசாமி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட கல்வி அலுவலர், பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டி, மற்றும் அக்கல்லூரியின் நிர்வாக செயலாளர் மற்றும் காவல் துறையினர் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...