கோவையில் ஓரின சேர்க்கைக்கு அழைத்தவர் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு!

கோவையில் ஓரின சேர்க்கைக்கு அழைத்தவரை கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதியரசர் டி.பாலு தீர்ப்பளித்தார்.


கோவை: கோவையில் ஓரின சேர்க்கைக்கு அழைத்தவரை கொலை செய்த வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்ற நீதியரசர் டி.பாலு தீர்ப்பளித்தார்.

கோவை தடாகம் சாலை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் வெளியே சுற்றி வந்ததாக தெரிகிறது. அப்போது கோவையை சேர்ந்த ரைசா என்ற திருநங்கையை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரைசா செல்வபுரம் அடுத்த பனைமரத்தூர் பகுதியில் உள்ள தனது நண்பராகிய மஞ்சு என்பவரது வீட்டில் வசித்து வந்தார். இதனால் ரைசாவை பார்க்க வரும் ரமேஷ் அடிக்கடி பனைமரத்தூர் வந்து அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் வளாகத்தில் தினமும் உறங்கி வந்ததாக தெரிகிறது.

அப்போது அதே பகுதியை சேர்ந்த திருப்பூர் தனியார் வங்கி உதவி பணியாளர் கவின் மூர்த்தி (27) என்பவர் பழக்கமாகி உள்ளார். இருவரும் மது குடித்து விட்டு அதே கோவிலில் இரவு நேரத்தில் தங்கி வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2020 ஜூலை 7ஆம் தேதி கோவில் வளாகத்தில் இருந்த போது, கவின் மூர்த்தியை ரமேஷ் ஓரின சேர்க்கைக்கு வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கவின் மூர்த்தி, ரமேஷை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதையடுத்து செல்வபுரம் போலீசார் கவின் மூர்த்தியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து இதில் கவின் மூர்த்தி குற்றவாளி என்றும், அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,500 அபராதம் விதித்தும் நீதியரசர் டி.பாலு தீர்ப்பளித்தார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...