கோவை பொள்ளாச்சி நகராட்சியில் பாதாளச் சாக்கடை பணிகள் முடிந்தும் தார்சாலை போடாததால், வாகன ஓட்டிகள் அவதி..!

நகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை பொள்ளாச்சி நகராட்சியில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்தும் தார்சாலை போடாததால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த 2016-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகள் தொடங்கியது. 5- ஆண்டுகளுக்கு மேலாகியும் பணிகள் முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சி நகரம், மகாலிங்கபுரம், வெங்கடேச காலனி உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டு தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.



இருப்பினும், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட சி.டி.சி காலனி, ஜோதி நகர், கோட்டூர் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை இணைப்புகள் கொடுத்தும், இன்னும் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறாமல் உள்ளது.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்படுவதாகவும், இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

எனவே, நகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த இடங்களில் தார் சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...