கோவை பொள்ளாச்சியில் திருமண செலவுக்கு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கூலி தொழிலாளி தற்கொலை..!

திருமண செலவுக்காக ரூ.28-ஆயிரம் வாங்கிய நிலையில், சரியான நேரத்தில் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை என்பதால், திருமணமான 4-மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை பொள்ளாச்சியில் திருமண செலவுக்கு வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் ரோடு நடராஜ் மணியகாரர் காலனியை சேர்ந்தவர் ஐயப்பன்(23). சுமை தூக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கும் கமலி (20) என்பவருக்கும் கடந்த 4-மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமண செலவுக்காக ஐயப்பன் அருகில் உள்ளவர்களிடம் ரூ.28-ஆயிரம் வாங்கி உள்ளார். அதனை அவரால் சரியான நேரத்தில் திருப்பி செலுத்த முடியவில்லை. இது அவரது தாயாருக்கு தெரியவந்தது.

உடனே அவர் ஐயப்பனிடம் பணத்தை திருப்பி செலுத்துமாறு அறிவுரை கூறினார். இதனால் ஐயப்பன் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்ததாக தெரிகிறது.

நேற்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு கொண்டதாக தெரிகிறது. வீட்டின் அருகில் வசிக்கும் நபர் அவர் தூக்கிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 4-மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...