பொள்ளாச்சியில் துவங்க உள்ள உலகத்தரம் வாய்ந்த எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரிய ஆயிரக்கணக்கான படித்த இளம் பெண்கள் கலந்துகொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர்.
கோவை: பொள்ளாச்சியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 5-ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் படித்த இளைஞர் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கையாக தமிழக முதல்வர் தமிழகத்தில் புதிதாக தொடங்கவுள்ள பல்வேறு கார்ப்பரேட் நிறுவன தொழிற்சாலைகளில் தமிழகத்தில் படித்த இளைஞர், இளம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில், பொள்ளாச்சியில் டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு உலகத்தரம் வாய்ந்த எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை துவங்க உள்ளது. இதில் 5000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அந்நிறுவனம் முன் வந்துள்ளது.
இன்று பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான படித்த இளம் பெண்கள் கலந்துகொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கி உள்ளனர்.
பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் நகராட்சி தலைவி சியாமளா நவநீத கிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு பொள்ளாச்சியில் செல்போன், லேப்டாப், கேமராக்கள் உள்ளிட்ட உயர்தர எலக்ட்ரானிக் உதிரிப்பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை 6-மாத காலத்தில் துவங்க உள்ளது.

இதில் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.