கோவை பொள்ளாச்சி வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி கடலூரைச் சேர்ந்த பெண்ணிடம் பணம் மோசடி..!

வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சியை சேர்ந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக கூறி கடலூரைச் சேர்ந்த பெண்ணிடம் பணம் மோசடி செய்த, பொள்ளாச்சியை சேர்ந்த ஆசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சுப்பையன் நகரை சேர்ந்தவர் காளிதாஸ்(32). இவர், கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பட்டியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மனைவி தமிழ்செல்வியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் நியூ ஸ்கீம் ரோட்டில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிவதாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

பின் கடன் பெற்று தருவதாக கூறி தனது வங்கி கணக்கில் பணம் செலுத்த தெரிவித்துள்ளார். இதை நம்பிய தமிழ்செல்வி மூன்று கட்டமாக மொத்தம் 12,200 செலுத்தியுள்ளார். பணம் கொடுத்தும், பல நாட்கள் கடந்தும் வங்கிக்கடன் பெற்று தராமல் காளிதாஸ், ஏமாற்றி வருவதை தெரிந்து, இதுகுறித்து தமிழ்செல்வி, நியூ ஸ்கீம் ரோட்டில் சம்பந்தப்பட்ட வங்கியில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து வங்கி மேலாளர், காளிதாஸ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில், தற்போது கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...