திருப்பூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டி படுகொலை..!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: திருப்பூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் தனியாக இருந்த போது வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் நடத்தி வரும் இவர் தனது மனைவியை பிரிந்து தனது தாய் மற்றும் தந்தையுடன் சிட்கோ பகுதியில், உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

நேற்று அமாவாசை என்பதால் பாலசுப்பிரமணியத்தின் பெற்றோர் குலதெய்வ கோவிலுக்கு சென்று விட்ட சூழ்நிலையில், பாலசுப்ரமணியம் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.



இந்நிலையில், நேற்று நள்ளிரவில் பாலசுப்ரமணியம் வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் சிலர் வீடு புகுந்து வீட்டில் தனியாக இருந்த பாலசுப்பிரமணியத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.



கோவிலுக்கு சென்ற பெற்றோர் வீடு திரும்பி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் பாலசுப்ரமணியம் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்துக்குளி காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...