கோவையில் வட்டி தொகை போக கூடுதலாக வட்டி கொடுக்க வேண்டும் என்று மிரட்டியவர் மீது கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவையில் வட்டி தொகை போக கூடுதலாக வட்டி கொடுக்க வேண்டும் என்று மிரட்டியவர் மீது கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா மற்றும் கலைவாணி. இவர்கள் இருவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு கிருஷ்ணசாமிபுரத்தை சேர்ந்த பூபதி சிவராஜ் (25) என்பவரிடம் வட்டிக்கு ரூ.17,500 வாங்கியுள்ளனர். இந்த தொகையை கலைவாணி ஒவ்வொரு மாதமும் ரூ.2,300 என்ற கணக்கில் கொடுத்து கழித்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் கலைவாணியின் வீட்டிற்கு சென்ற பூபதி சிவராஜ் கடன் தொகை போக கூடுதலாக ரூ.2,300 வட்டித் தொகை கொடுக்க வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுக்கவே வீட்டில் இருந்த இரு சக்கர வாகனத்தை பூபதி எடுத்து வந்துள்ளார்.
மேலும் அடிக்கடி கலைவாணியிடம் வட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதையடுத்து கலைவாணி கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து பூபதி மீது கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆபரேஷன் கந்துவட்டி அமலான பிறகு இரண்டாவது கந்துவட்டி வழக்கை கோவை போலீசார் பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.