கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை!

கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேக்கரி டீ மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சின்னராஜ் (32). இவர் கோவையில் தங்கி தனியார் பேக்கரி டீ மாஸ்டராக பணியாற்றி வந்தார். அப்போது கடை அருகே வசித்து வந்த கோவையை சேர்ந்த 6 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த சம்பவத்தை அந்த சிறுமியின் தந்தை நேரில் பார்த்து விட்டார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் உதவியுடன் சின்னராஜை பிடித்து பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் சின்னராஜ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் அரசு சார்பில் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...