கோவை உக்கடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ அமைப்பினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
கோவை: கோவை உக்கடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ அமைப்பினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.
கோவை - பொள்ளாச்சி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது. ஆனால், தற்போது வரையில் பணிகள் முடிக்கப்படவில்லை. மந்த நிலையில் பணிகள் நடைபெற்று வந்துள்ளது.

ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் உக்கடம் மேம்பால பணிகளை விரைந்து முடிக்க கோரி, ஆத்துப்பாலம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அடுத்தடுத்து குனியமுத்தூர், சுந்தராபுரம் செல்லும் சாலையில் 4 இடங்களில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ததால் போலீசாருடன் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.