கோவை வால்பாறை நகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் உறுப்பினர்கள் இருக்கைகள் குறித்து சிறிது நேரம் சலசலப்பு..!

இதில் சரியாகவும், வரிசையாக்கம் பெயர் பலகை இல்லை என்று 21-வார்டு உறுப்பினர் மகேஸ்வரி தெரிவித்து, வார்டு உறுப்பினர் அமரும் இருக்கையில் அமராமல் பத்திரிகையாளர்கள் அமர்ந்து இருக்கும் இருக்கையில் அமர்ந்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.


கோவை: வால்பாறையில் நகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் உறுப்பினர்கள் இருக்கைகள் சம்பந்தமாக சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

வால்பாறை நகராட்சியில் இன்று உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் ஆணையாளர் பாலு மற்றும் நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 21-வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். 1-ல் இருந்து 21-உறுப்பினர்களுக்கு வரிசையாக இருக்கைகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் கடந்த மாதம் கூட்டத்தில் பெயர் பலகை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருக்கையில் அமர்ந்தனர்.

இந்த கூட்டத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது அதிலும் 1-ல் இருந்து 21 வரிசையாக இல்லாமல் 1 ல் இருந்து 11-வரை ஒரு பக்கமாகவும் 12-ல் இருந்து 21-வரை மரு பக்கமும் இருக்கைகள் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது.



இதில் சரியாகவும், வரிசையாக்கம் பெயர் பலகை இல்லை என்று 21-வார்டு உறுப்பினர் மகேஸ்வரி தெரிவித்து, வார்டு உறுப்பினர் அமரும் இருக்கையில் அமராமல் பத்திரிகையாளர்கள் அமர்ந்து இருக்கும் இருக்கையில் அமர்ந்தார்.



இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஆணையாளர் இவற்றைச் சரி செய்து பின் அவர்களுக்கு உரிய இடத்தை வழங்கினார். அதன் பின் கூட்டம் நடைபெற்றது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...