பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை மின்சார ரயில் சோதனை ஓட்டம்..!

சோதனை ஓட்டம் குறித்து ஆய்வு செய்த பின்னர், தொடர்ந்து பழனி - பொள்ளாச்சி இடையே மின்சார ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு இடையே மீட்டர் கேஜ் பாதையாக இருந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, ரயில்வே மின் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

இதில், பொள்ளாச்சி போத்தனூர் வழி தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்தது மின்சார ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பழனி வரையில் மின்மயமாக்கல் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பழனியில் இருந்து பொள்ளாச்சி வரை சோதனை ஓட்டம் நடத்த ரயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதற்காக மதுரையில் இருந்து பழனி வந்த பயணிகள் ரயிலில் பொருத்தி இருந்த டீசல் இன்ஜின் மாற்றம் செய்து, மின்சார ரயில் என்ஜின் பொருத்தப்பட்டு, காலை 10.40 மணிக்கு பயணிகளுடன் ரயில் புறப்பட்டது, பின் 12 மணிக்கு பொள்ளாச்சி வந்தடைந்தது.



12.5 மணிக்கு பொள்ளாச்சியிலிருந்து கோவை புறப்பட்டது. சோதனை ஓட்டம் குறித்து ஆய்வு செய்த பின்னர், தொடர்ந்து பழனி பொள்ளாச்சி இடையே மின்சார ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...