நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பைகளை அகற்றி கழிவறைகளை சுத்தம் செய்யும் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவோர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பழைய கட்டிடம் பின்புறம் உள்ள இருசக்கர வாகன நிறுத்தம் அருகில் இரண்டு குப்பை தொட்டிகள் உள்ளன. ஆனால் குப்பை தொட்டியில் போடப்படும் குப்பைகள் சரிவர அகற்றப்படாமல் இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது.
பெரும்பாலும் இந்த பழைய கட்டிடத்தில் ஏதேனும் அரசு நிகழ்ச்சிகள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தால் மட்டுமே குப்பைகள் அகற்றப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கும் போது அன்றோ அல்லது அதற்கு மறு நாள் தான் குப்பைகள் அகற்றப்படுகின்றன.

பின்பு மீண்டும் குப்பைகள் அகற்றப்படாமலேயே உள்ளது. அதே போல் அதன் அருகில் உள்ள கழிவு நீர் குழாயும் உடைந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. மேலும், பழைய கட்டிடத்தில் உள்ள பொது கழிப்பறைகளும் முறையாக சுத்தம் செய்யப்படாததால் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குப்பைகளை அகற்றி கழிவறைகளை சுத்தம் செய்யும் படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவோர் மற்றும் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.