கோவை பொள்ளாச்சியில் உள்ள பிரதான சாக்கடை கால்வாயை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை..!

தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக நகராட்சி அதிகாரிகள் இந்த பிரதான சாக்கடை கால்வாயை தூர்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என்றும், குடியிருப்புக்குள் மழைநீர் போகாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பொள்ளாச்சியில் உள்ள பிரதான சாக்கடை கால்வாயை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட நேரு நகர், பெரியார் காலனி, மரப்பேட்டை வீதி, கண்ணப்பன் நகர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக பொள்ளாச்சியில் பிரதான சாக்கடை கால்வாய் ஜமீன் ஊத்துக்குளி கிருஷ்ணா குளம் வரை செல்கிறது.



இந்த பிரதான சாக்கடை கால்வாயை ஒட்டி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மழைக்காலங்களில் சாக்கடை கால்வாய் வழியாக மழை நீர் புகுந்து குடியிருப்புக்குள் சூழ்ந்து கொள்ளும் நிலை தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.

எனவே, தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக நகராட்சி அதிகாரிகள் இந்த பிரதான சாக்கடை கால்வாயை தூர்வாரி, ஆழப்படுத்த வேண்டும் என்றும், குடியிருப்புக்குள் மழைநீர் போகாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...