கோவையில் பேருந்து நிழற்குடையை உடைத்தவருக்கு ஓராண்டு சிறை, ரூ.2-ஆயிரம் அபராதம்…!

தனது வீட்டின் முன்பு உள்ளதாக கூறி, கடப்பாரையை கொண்டு அடித்து உடைத்துள்ளார். இதுகுறித்து கேட்ட ஊராட்சி செயலரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.


கோவை: கோவை வரதனூர் ஊராட்சி செங்குட்டைபாளையம் அருகே பேருந்து நிழற்குடையை உடைத்து சேதப்படுத்தியவருக்கு 1-ஆண்டு சிறை ரூ.2-ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவை வரதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட செங்குட்டைபாளையம் கிராமத்தில் இருந்த பேருந்து நிழற்குடையை சந்திரமூர்த்தி (53), என்பவர் அடித்து உடைத்துள்ளார்.

தனது வீட்டின் முன்பு உள்ளதாக கூறி, கடப்பாரையை கொண்டு அடித்து உடைத்துள்ளார். இது குறித்து கேட்ட ஊராட்சி செயலரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையடுத்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுகுறித்த வழக்கு விசாரணை கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் சந்திர மூர்த்திக்கு ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...