கோவை பொள்ளாச்சியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம்: 12-பேர் கைது..!

பொள்ளாச்சி அருகே விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக சூதாடிய 12-பேர் கைது செய்யப்பட்டு 4-லட்சத்து 16-ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி அருகே விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக சூதாடிய 12-பேர் கைது செய்யப்பட்டு 4-லட்சத்து 16-ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து மகாலிங்கபுரம் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் சட்டவிரோதமாக ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி வருவதாக மகாலிங்கபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்த போலீசார் சம்பந்தப்பட்ட தோட்டத்தில் ஆய்வு செய்தபோது ஒரு கும்பல் அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயன்றது. பின்னர், போலீசார் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டபோது லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்களிடமிருந்து 4-லட்சத்து 16-ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார் சூதாட்டத்திற்கு ஏற்பாடு செய்த காளிமுத்து உள்ளிட்ட 12-நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...