கோவையில் பெண்ணை அவதூறாக பேசி கிண்டல் செய்து தாக்கிய இளைஞர் கைது..!

புகாரின் பேரில் தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளைஞரை ரத்தினபுரி போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் பெண்ணை அவதூறாக பேசி கிண்டல் செய்து தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரியை சேர்ந்த 38-வயது பெண். இவர் சமையல் வேலைக்கு சென்று வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்க்கும் பிரவீன் (33) என்பவர் வசித்து வருகிறார்.

இவர், அடிக்கடி பெண்ணிடம் ஆபாச செய்கை காட்டி அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று அந்த பெண் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது வீட்டருகே மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்த பிரவீன் அந்த பெண்ணிடம் மீண்டும் தகராறு செய்தார்.

அப்போது அவர் தகாத வார்த்தைகளால் பேசி அந்த பெண்ணை கீழே தள்ளினார். இதுகுறித்து அவர் ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...