கோவையில் செயல்பட்டு வந்த சென்னை மருத்துவமனை தாக்குதல் வழக்கு - மேலும் 3 பேரை கைது செய்தது சிபிசிஐடி…!

எல்லன் மருத்துவமனை வழக்கில்,கோவையை சேர்ந்த கேபிள் ராஜா, சுரேஷ், கோகுலகிருஷ்ணன் ஆகிய கூலிப்படையினரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர் உட்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவை எல்லன் மருத்துவமனை விவகாரத்தில், மருத்துவமனை உரிமையாளர் மருத்துவர் ராமச்சந்திரன் உட்பட 10 பேரை கைது செய்துள்ள நிலையில், வழக்கில் தொடர்புடைய மேலும் மூவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை டாடாபாத் பகுதியை சேர்ந்த கேபிள் ராஜா (38), ரத்தினபுரி சேர்ந்த சுரேஷ் (33), சிவானந்தா காலனியை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 3 பேரும் கூலிப்படையினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விசாரணையில், கூலிப்படையை சேர்ந்த கேபிள் ராஜா, சுரேஷ்,கோகுலகிருஷ்ணன் ஆகிய மூவரை பயன்படுத்தியதும், அவர்களுக்கு தினசரி தலா 1,500 ரூபாய் பணம் கொடுத்து அவர்களை அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.

மேலும், மருத்துவமனை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர் உட்பட மேலும் சிலரை

சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...