தமிழகத்திலேயே முதல் முறையாக திருப்பூரில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி..!

சிறப்பு குழந்தைகளின் மேடை பயத்தை போக்கும் விதமாகவும், அவர்களின் திறமைகளை மேலும் வளர்க்கவும், திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் சிறப்பு குழந்தைகளுக்கான ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



பெரும்பாலும் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிறப்பு திறன்களை பெற்று விளங்குகின்றனர்.

இவ்வாறான, குழந்தைகளுக்கு முறையான பயிற்சி அளிக்கும் பொழுது அவர்கள் மற்றவர்களுடன் சாதாரணமாக பழகும் சூழல் ஏற்படுகிறது.

இந்த சிறப்பு குழந்தைகளின் மேடை பயத்தை போக்கும் விதமாகவும், அவர்களின் திறமைகளை மேலும் வளர்க்கவும், திருப்பூரில் இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பில் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் சாய் கிருபா சிறப்பு பள்ளியும், கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளியும் பங்கேற்றன.

இந்த ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஏராளமான சிறப்பு குழந்தைகள் புதுவிதமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு மேடையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் துவக்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளையின் நிறுவனர் கவிதா ஜெனார்த்தனன் மற்றும் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.



இந்த நிகழ்ச்சியில், சிறப்பு குழந்தைகள் பல்வேறு விதமான ஆடைகளை அணிந்து அணிவகுத்து வந்தது காண்போரை கவரும் வகையில் இருந்தது. இதனிடையே, இனி ஒரு விதி செய்வோம் அறக்கட்டளை சார்பாக ரூ.14,000 காசோலை சாய் கிருபா சிறப்பு பள்ளி மற்றும் கௌமாரம் பிரசாந்தி சிறப்பு பள்ளிக்கு வழங்கப்பட்டது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...