கோவை குற்றாலம் அருகே காட்டு யானை தாக்கி குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் பலி….!

சிறுவாணி நோக்கி இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, கோவை குற்றாலம் அருகே சாலையில் நின்றிருந்த ஒற்றை காட்டு யானை காளிதாசனை வழிமறித்து தாக்கியது.


கோவை: கோவை குற்றாலம் சர்க்கர் போரத்தி அருகே ஒற்றை காட்டு யானை தாக்கி, இரு சக்கர வாகனத்தில் சென்ற குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிறுவாணி அடிவாரம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் காளிதாசன் (59). இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ஷீபா (49). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இன்று, வீட்டு உபயோக பொருட்கள் வாங்க சிறுவாணி குடிநீர் வடிகால் வாரிய குடியிருப்பில் இருந்து காளிதாசன் மற்றும் ஷீபா ஆகிய இருவரும் கோவை குற்றாலம் அருகே உள்ள மலையோர கிராமத்திற்கு வந்தனர். பின்னர், அங்கு இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பேருந்தில் ஏறி கோவை டவுன்ஹால் பகுதிக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்க சென்றதாக தெரிகிறது.

பின்னர், மீண்டும் சிறுவாணி செல்லும் பேருந்தில் ஏறி கோவை குற்றாலம் வந்து போது, ஷீபாவை பேருந்திலேயே செல்ல அறிவுறுத்திய காளிதாசன், அங்கு நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தில் சிறுவாணி நோக்கி சென்றுள்ளார். அப்போது கோவை குற்றாலம் அருகே உள்ள சர்க்கார் போரத்தி அருகே வந்த போது, சாலையில் நின்றிருந்த ஒற்றை காட்டு யானை காளிதாசனை வழிமறித்து தாக்கியது.



தகவலறிந்து அங்கு வந்த உடனடியாக வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர், உயிருக்கு போராடி கொண்டிருந்த காளிதாசனை மீட்டு காருண்யா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து காருண்யா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...