பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட விவசாயிகள், பாசன சங்கங்கள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட விவசாயிகள், பாசன சங்கங்கள், பொதுநல அமைப்புகள், பொதுமக்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சியில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாளை பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன், விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இப்பிரச்சனை குறித்து வரும் ஜூலை 1ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என் நேரு தலைமையில் அதிகாரிகள் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை
நடத்த உள்ளதாகவும், எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை கூட்ட அரங்கில் விவசாயிகள், வியாபாரிகள் போராட்ட கூட்டமைப்பினர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இரண்டு துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதால் பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு சாதகமான முடிவு எட்டப்படும் என்று நம்புவதாகவும், எனவே நாளை நடைபெற இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
பேச்சுவார்த்தையில், விவசாயிகளுக்கு சாதகமான முடிவு எட்டப்படவில்லை என்றால் வரும் ஜூலை 3ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.