தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம், வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் மிகப்பெரிய பங்களிப்பு செய்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.



கோவை:  தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம், வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 'ஓ.இ' மில்கள் பிரச்சினைகளுக்கு இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம்(OSMA) மற்றும் வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கத்தின் (OSMA) தலைவர் , அருள்மொழி மற்றும் வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின் தலைவர் பிரீதம் சிங் ஆகியோர் கூறியதாவது:-

ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சு கொண்டு நூல் உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட் மில்களில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 600க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் மில்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ கிரே நூல் 15 லட்சம் கிலோ மறுசுழற்சி செய்யப்பட்ட கலர் நூலும் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல் பானிபட், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் 250 ஓபன் எண்ட் மில்கள் செயல்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கிலோ மறுசுழற்சி செய்யப்பட்ட கலர் நூலும் 10 லட்சம் கிலோ கிரே காட்டன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஓபன் எண்ட்  மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூலை கொண்டு தயாரிக்கப்படும் படுக்கை விரிப்புகள், ஜீன்ஸ், தலையணை உறைகள், துண்டு, கிச்சனில் பயன்படுத்தப்படும் துணி வகைகள், பெண்களுக்கான நைட்டி, லெக்கின்ஸ், திரைசீலைகள், டீ சர்ட், பர்மாடாஸ் உள்ளிட்ட பல்வேறு ஜவுளி பொருட்கள் பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளித்து வருகிறது.

உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கழிவுப் பஞ்சை பயன்படுத்தி இந்நூல் தயாரிப்பது மட்டுமின்றி பயன்படுத்தப்பட்ட பெட் பாட்டில் மற்றும் பனியன் வேஸ்ட்  உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நூல் உற்பத்தி செய்யும் பணியும் ஓபன் எண்ட் மில்களில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் மிகப்பெரிய பங்களிப்பு செய்கின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இத்துறை எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் சங்கம் மற்றும் வட இந்தியாவில் செயல்படும் வட இந்திய ரோட்டார் ஸ்பின்னிங் மில் சங்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கோம்பர் நாயில் என்று சொல்லக்கூடிய கழிவுப் பஞ்சு ரகத்தின் விலை மிக அதிகமாக உள்ளது. உள்நாட்டு தேவைக்கு போக மட்டுமே ஏற்றுமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நவம்பர் மாதம் பருத்தி சீசன் காலத்தில் மத்திய அரசின் காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு ஸ்பின்னிங் மில்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய வேண்டும்.

ஓபன் எண்ட் மில்களில் பயன்படுத்தப்படும் மெஷின்கள் 100%  வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன எனவே இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியை முற்றிலுமாக மத்திய அரசு நீக்க வேண்டும்.

ஓபன் எண்ட் நூல் வகைகளுக்கு தனியாக  'HSN CODE' ஒதுக்கி  அதை கெசட்டில்(GAZETT) அறிவிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட கோரிக்கைகள் அனைத்தும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க இரு சங்கங்களும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...