கோவை வெள்ளலூர் குப்பை கிடக்கில் தீ விபத்து…!

வெள்ளலூர் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் லாரி மூலம் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், தீ மளமளவென பரவியதால், தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


கோவை: வெள்ளலூர் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், அங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால்,தனித்தனியாக குவியல்களாக குப்பைகள் பிரிக்கப்பட்டு,தரம் பிரிக்கும் பணியில் நடைபெற்று வருகிறது. மேலும், நிரந்தரமாக தீயணைப்பு வண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் திடீரென இன்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் லாரி மூலம் தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும், தீ மளமளவென பரவியதால், தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி, தீயணைப்பு வீர்ரகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும்,குப்பை கிடங்கின் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாத வண்ணம் தண்ணீரை பீச்சி அடித்தனர்.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...