திருப்பூரில் வாளியில் உள்ள நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பலி.

திருப்பூரில் வாளியில் உள்ள நீரில் மூழ்கி 11 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


திருப்பூர்: திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் அருகே உள்ள அவிநாசி நகர் பகுதியில், பீகாரை சேர்ந்த புதன்மார்கோ (29) மற்றும் மனைவி சன்விகா தேவி (27) ஆகியோர் குடும்பத்துடன் தங்கி பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது 11 மாத ஆண் குழந்தை தஞ்சன். இந்நிலையில் புதன்மார்கோ இன்று வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் சன்விகா தேவியும், தஞ்சனும் இருந்தனர். இந்நிலையில் தஞ்சனை தூங்க வைத்த சன்விகா தேவி, அருகில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது தூக்கத்தில் இருந்து எழுந்த தஞ்சன், எதிர்பாராதவிதமாக வீட்டின் முன்பு இருந்த வாளியில் தலை குப்புற விழுந்துள்ளான். வாளியில் நீர் இருந்ததால் குழந்தையால் கூச்சலிட முடியவில்லை.



சிறிது நேரத்திற்குப் பிறகு குழந்தை வாளிக்குள் தலை குப்புற விழுந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர், குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் பிறகு சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். வாளியில் உள்ள நீரில் மூழ்கி 11 மாத குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...