முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஊழல் வழக்கில் கோவை மாநகராட்சி முன்னாள் ஆணையாளர் கே. விஜய கார்த்திகேயன் உட்பட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் பெயர்களை லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) தனது அறிக்கையில் சேர்த்துள்ளது.
கோவை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ். பி. வேலுமணி தொடர்பாக நடந்து வரும் விசாரணையில், சாலை ஒப்பந்தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டெண்டர்களில் உள்ள முறைகேடுகளை வேண்டுமென்றே கண்டு கொள்ளாமல் இருந்ததாக குற்றம்சாட்டி, 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்களை லஞ்ச ஒழிப்புத் துறை துறையினர்
சேர்த்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்பு துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட மொத்தம், 10 அதிகாரிகளின் பெயர்களை சேர்த்துள்ளது. அதன்படி, கே. விஜயகார்த்திகேயன் (கோவைமாநகராட்சி முன்னாள் ஆணையாளர்), சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையாளர், ஜி.பிரகாஷ், முன்னாள் துணை ஆணையாளர் (பணிகள்) கந்தசாமி, முன்னாள் துணை ஆணையாளர் (சுகாதாரம்) மதுசூதன் ரெட்டி, கோவை முன்னாள் துணை ஆணையாளர், காந்திமதியின் பெயரும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாகவும், அநியாயமாகவும் ஒப்பந்தங்கள் வழங்கியதில், இந்த அதிகாரிகளுக்குதொடர்பு உள்ளது என்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரத்தினர்உறுதி செய்து அவர்கள் பெயர்களையும் அறிக்கையில் இணைத்துள்ளனர்.
அதன்படி, முன்னாள் அமைச்சருக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 9, 2021 அன்று எஃப்ஐஆர் பதிவு செய்தனர். அதில், வேலுமணி 2014-2021 வரை அமைச்சராக இருந்தபோது, அவருடன் தொடர்புடையதாக கூறப்பட்ட 10 நிறுவனங்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டது. அதில், செந்தில் அண்ட் கோ, மகா கணபதி ஜுவல்லரி, வர்தன் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ஜேசிபி இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆலயம் பவுண்டேஷன், சி ஆர். கட்டுமான நிறுவனம், ஏ.சி.ஈ டெக், ஓசுர் பில்டர்ஸ், கன்ஸ்றோனிக்ஸ் இந்தியா, கன்ஸ்றோமால் கூட்ஸ் மற்றும் ஆழம் கோல்ட ஆகிய நிறுவனங்கள், 2014-2021 ஆகிய ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டன.
பின்னர், செப்டம்பர் 25, 2021 அன்று லஞ்ச ஒழிப்பு துறை தனது அறிக்கையில், சென்னை மற்றும் கோவை மாநகராட்சி அதிகாரிகள் குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டு அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்திருந்தனர்.
விஜயகார்த்திகேயன் (கோவை நகர மாநகராட்சி முன்னாள் கமிஷனர்), சென்னை மாநகராட்சி முன்னாள் கமிஷனர் ஜி.பிரகாஷ், முன்னாள் துணை கமிஷனர் (பணிகள்) கந்தசாமி, முன்னாள் துணை கமிஷனர் (சுகாதாரம்) மதுசூதன் ரெட்டி ஆகிய நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
சாலை ஒப்பந்தங்கள் மற்றும் பிற ஒப்பந்தங்களுக்கு கொடுக்கப்பட்ட முறைகேடுகளை அதிகாரிகள் வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விட்டதால், அரசு கருவூலத்திற்கு கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருந்தனர்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட ரகசியஅறிக்கையில், இந்த மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் அதிகாரிகளை கூடுதல் குற்றவாளிகளாக சேர்க்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. ஊழலில் அதிகாரிகளின் பங்கை அறிக்கை உறுதிப்படுத்திய போதிலும், ஊழல் மோசடியில் பெயரிடப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அரசாங்கம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தற்போது அந்த நான்கு ஐ ஏ.எஸ் அதிகாரிகளின் பெயர்கள் குற்ற அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல, லஞ்ச ஒழிப்புத்துறை பெயரிடப்பட்டுள்ள மற்ற அதிகாரிகள்: கோவை மாநகராட்சி முன்னாள் துணை ஆணையர் காந்திமதி, சென்னை மாநகராட்சி முன்னாள் தலைமை பொறியாளர் எல்.நந்தகுமார், சென்னை மாநகராட்சி முன்னாள் செயல் பொறியாளர் ஆர்.செந்தில்நாதன், கோவை மாநகராட்சி முன்னாள் உதவி செயற்பொறியாளர் கே.சரவண குமார், கோவை மாநகராட்சி முன்னாள் உதவி பொறியாளர் எஸ்.பி.ரவி கண்ணன் மற்றும் முன்னாள் கோவை மாநகராட்சி வரைவாளர் அனிதா ஜோசபின்.
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகள் மூலம் ரூ.130 கோடி மதிப்பிலான 53 ஒப்பந்தங்களை ஒரு சில நிறுவனங்கள் பெற்றுள்ளதாக சென்னையை சேர்ந்த அறப்போர் இயக்கம் என்ற ஊழல் எதிர்ப்பு தன்னார்வ தொண்டு நிறுவனம் செப்டம்பர் 12, 2018 அன்று புகார் அளித்ததை அடுத்து வேலுமணியின் ஊழல் குறித்து விசாரணை தொடங்கப்பட்டது.