சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் - பல்வேறு கட்சியினர் முற்றுகை போராட்டம்.

திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிங்காநல்லூர் ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.



திமுக கோவை மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் குமார், சிபிஐ மாவட்ட செயலாளர் சுந்தரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் தனபால், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் இலக்கியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே துறையிடமும், மத்திய அரசிடமும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இந்த முற்றுகை போராட்டத்தில் திமுக காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.



Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...