கோவையில் நீண்ட நாட்களாக பதிவு செய்யாமல் இருந்த 32 வாகன திருட்டு வழக்குகள் பதிவு - மாநகர காவல் ஆணையாளர் அதிரடி நடவடிக்கை.

கால தாமதமாக வழக்குப் பதிவு செய்தால், சமந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் மூன்று மாதங்களுக்குள் வாகனங்களை கண்டுபிடிக்கவில்லை என்றால், non traceable சான்றிதழ் கொடுக்கவும் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகரில் நேற்று ஒரே நாளில் வாகன திருட்டு தொடர்பாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த வழக்குகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகரில் நீண்ட நாட்களாகபதிவு செய்யாமல் உள்ள வாகன திருட்டு தொடர்பான வழக்குகளை உடனடியாக பதிவு செய்ய அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு, மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், கால தாமதமாக வழக்குப் பதிவு செய்தால், சமந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து, நேற்று ஒரே நாளில் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் -5 வழக்குகள், காட்டூர், பெரியகடை வீதி தலா காவல் நிலையங்களில்- 4, வெரைட்டி ஹால் ரோடு, சாய்பாபா காலனி, குனியமுத்தூர் காவல் நிலையங்களில் தலா -3, ஆர்.எஸ்.புரம், செல்வபுரம் காவல் நிலையங்களில் தலா - 2, உக்கடம், ரத்தினபுரி, போத்தனூர்,பீளமேடு, சரவணம்பட்டி காவல் நிலையங்களில் தலா - 1 வழக்குகள் என 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

திருட்டு தொடர்பான வழக்குகளை உடனடியாக கண்டுபிடிக்கவும், மேலும் 3 மாதங்களுக்குள் வாகனங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், non traceable சான்றிதழ் கொடுக்கவும் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Newsletter

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...